Tuesday, December 22, 2009

இறைவனுக்கு ஒரு அழைப்பு!!!...

இறைவா!!!...
தாமதம் ஏன்
உன் இரண்டாம் வருகைக்கு...
ஆக்கிரமிப்பை அகற்ற
அன்று சாட்டையை எடுத்த நீ
இன்று
சட்டத்தை கையில் எடுக்க
தயக்கம் காட்டுவது ஏன்???
நீ விட்டு சென்ற பணியை
உன் ஆதரவாளர்கள் செய்வார்கள்
என்ற எண்ணமா???
அவர்கள் நீ அன்பை விதைத்த இடத்தில
வேரை வெட்டி விட்டு
தண்ணீரை மட்டும்
மறக்காமல் ஊற்றுகிறார்கள்!!!...

மகரந்தத்தை நுகரும்
வண்டுகள் கூட சொல்கின்றன - மலர்களில்
துப்பாக்கி வாசனை அடிக்கிறதென்று..
ஏனெனில்,
இங்கு பூப்பதே
மரணப்பூக்கள் மட்டும் தானே!!!...

சீக்கிரம் வந்து விடு.
நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் - இங்கு
துப்பாக்கி முனையில் மட்டுமே
மலர்கள் மலரும்
மரிப்பதர்காக மட்டும்.!!!...

Wednesday, February 18, 2009

எனது பார்வையில்!!!... (ஹைக்கூ)

விபச்சாரி
இரையாகி விட்டு
பசியாருகிறாள்!!!..

தாய்மை
மழலை பெண்ணுக்கு
தரும் பதவி உயர்வு!!!..

நிலா
ஒளி கொடுத்தே
தன்னை இருட்டாக்கி கொள்பவன்!!!..

கல்லூரி
மொட்டு விட துடிக்கும்
அரும்புகளை பூக்களாக
மாற்றும் களர் நிலம்!!!...


சகோதரன்
நம் நட்டுபுக்காக
தாயின் கருவறையிலிருந்து
சிறை மீண்டவன்!!!...

மதம்
அன்பை போதித்து
அடிதடியை வளர்க்கும்
மனிதப் படைப்பு!!!..

காதலி
காதலை வாங்கி
கண்ணீரை தருபவள்!!!..

மெழுகுவர்த்தி
அழுதுகொண்டே இருப்பதால்
இவனுக்கு ஆயுள் கம்மி!!!..

திருமணம்
சந்ததிகளை உருவாக்க
அனுமதிக்கப் பட்ட சடங்கு!!!...

Tuesday, February 10, 2009

நான் கடவுள் - _ என்னோட பார்வையில்

அன்பே சிவம் படத்துல ஒரு வசனம் வரும். கடவுள் இருக்காரா? இருக்காரு.. யாரு கடவுள்.. நீதான் கடவுள்.. நானும்தான் கடவுள்.. இந்த ஒரு லைன் தான் படத்தோட கதை.
Heroism த்த ரொம்ப யதார்த்தமா காட்ட முடியுமா? முடியும்ன்னு பாலா மறுபடியும் இந்த படம் மூலம் prove பண்ணி இருக்காரு.

இந்த உலகத்துல நடக்குற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சின்ன வயசிலேயே ஏன் hero ஆர்யாவ காசில் விட்டுட்டு போகணும். பல கழிச்சு எதுக்கு அவன தேடி வரணும். பல வருஷம் கழிச்சு வர போற ஒரு அரக்கன கொல்ரதுக்கா? May be.

கீதை ல ஒரு வசனம் இருக்கு. "தர்மம் அழிஞ்சு அதர்மம் எப்ப தல தூக்குதோ அப்பா நான் அவதாரம் எடுப்பேன்." அந்த அவதாரம்தான் நான் கடவுள் hero ருத்ரன்.
சரி அதர்மம் எது? அதுதான் இங்க நல்லா இருக்குற மக்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைக்குறது.

பல வருஷம் கழிச்சு சொந்த ஊருக்கு வரும் ருத்ரன்க்கு, தன்னோட தாய் தந்தை மேல எந்த பாசமும் இல்ல. இந்த மாதிரி எல்லாம் யோகி யால மட்டும்தாம் இருக்க முடியும். ஆனா இந்த படத்தோட ஹீரோவும் ஒரு யோகிங்க்ரதால இத ஏத்துக்க முடியுது. அதனால வீட்ட விட்டு ஒதுங்கி பக்கத்துல மலை மேல உள்ள கோவில்ல உள்ள சில போலி சாமியர்களோட இருக்காரு.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், நல்லா இருக்குற மக்களை பிச்சைக்கரங்களாக்கி பிச்சை எடுக்க வைக்கிற கூட்டம். இந்த கூட்டத்தோட தலைவன் ருத்ரனோட பார்வைல சிக்குரவர படம் போகுது. ருத்ரன் இவன பார்த்தும் அவன கொன்னுட்டு மறுபடியும் காசிக்கு போயிர்ராரு. இதுதான் கதை.

படத்துல விவாதம் பன்றதுக்கு ஏகப்பட்ட விஷயம் இருக்கு. உதாரணத்துக்கு வில்லன பாத்த ஒடனே ருத்ரன் அவன வதம் பண்றது. ஆனா படத்தோட ஹீரோ ஒரு யோகி அப்படிங்கறதுனால இது ஒரு பெரிய குறையா தெரியல.

விவாதம் பன்றதுக்கு ஏகப்பட்ட விஷயம் இருந்தாலும், பாராட்ரதுக்கு எக்கச்சக்கமா மேட்டர் இருக்கு.
முக்கியமா, Music, Direction and Action. இந்த படத்தோட hero பாலாவா, இளையராஜாவா இல்ல ஆர்யாவான்னு ஒரு பட்டி மன்றமே நடத்தாலாம். அந்த அளவுக்கு இது எல்லாமே சூப்பர்.
அதுவும் அந்த டைட்டில் song ல நம்மலே காசில இருக்குற மாதிரி ஒரு feeling. ஒவ்வொரு சீன் லயும் பின்னணி இசை கலக்கி இருக்காரு.

அப்புறம் ஆர்யா!!!. படத்தோட ஹீரோ. அவரு நடந்து வர்றது, bubble gum சாபிடற மாதிரி எப்ப பாத்தாலும் வாய அச போன்றது, fight சீன் இது எல்லாத்தையும் பாத்தா, இந்த அளவுக்க ஒருத்தன் நடிப்புல different காட்ட முடியுமா அப்படீங்கறது சந்தேகம்தான்.

அப்புறம் director பாலா, இவ்வளவு சீரியஸ் ஆன படத்துலயும் காமெடி பண்றது பாலாவ தவிர யாருக்கும் முடியாது. அதுவும் அம்பானி யாருடா ன்னு கேக்குறதுக்கு அவரு cell phone விக்கரிரவர்ந்னு சொல்லறது simply superb.

அப்புறம் ருத்ரன் court la ஆஜர் ஆகுற சீன். ஜட்ஜ் வரும்போது ஆர்யா சட்ட பண்ணாம பெஞ்ச் லயே ஒக்காந்து இருக்குறது. அதுலயும் நான் ஒன்னோட சட்டத்துக்கு எல்லாம் அடங்க மாட்டேன், நீ யாரு என்னைய control பன்றதுக்குன்ற மாதிரி ஒக்காந்து இருக்குறது அவர மாதிரி சாமியாரால மட்டும்தாம் முடியும்.

படத்துல பிச்சைக்காரங்களோட வாழ்க்கையை அப்படியே காட்டி இருக்குறது ரொம்ப நெருடல். But இதுதான் உண்மை அப்படீன்னு நெனக்கும் போது ரொம்ப கொடுமை.

பிச்சை எடுக்குறதுக்கு training குடுக்குறது "அம்மா தாயி பிச்சை போடுங்கம்மா" ன்னு எல்லாரையும் சொல்ல வக்குறது ரொம்ப யதார்த்தம்.

மொத்ததுல இருட்டான ஒரு வாழ்க்கைய வெள்ளி திரைல வெளிச்சம் போட்டு காட்டியிருக்காரு பாலா. இந்த படத்த பாத்ததுக்கு அப்புறம், நீங்க பிச்சைக்காரங்கள பாக்கும் போது, ஒங்கள அறியாமலேயே ஒரு second நின்னீங்கன்னா that is the success of நான் கடவுள்

Wednesday, January 28, 2009