இறைவா!!!...
தாமதம் ஏன்
உன் இரண்டாம் வருகைக்கு...
ஆக்கிரமிப்பை அகற்ற
அன்று சாட்டையை எடுத்த நீ
இன்று
சட்டத்தை கையில் எடுக்க
தயக்கம் காட்டுவது ஏன்???
நீ விட்டு சென்ற பணியை
உன் ஆதரவாளர்கள் செய்வார்கள்
என்ற எண்ணமா???
அவர்கள் நீ அன்பை விதைத்த இடத்தில
வேரை வெட்டி விட்டு
தண்ணீரை மட்டும்
மறக்காமல் ஊற்றுகிறார்கள்!!!...
மகரந்தத்தை நுகரும்
வண்டுகள் கூட சொல்கின்றன - மலர்களில்
துப்பாக்கி வாசனை அடிக்கிறதென்று..
ஏனெனில்,
இங்கு பூப்பதே
மரணப்பூக்கள் மட்டும் தானே!!!...
சீக்கிரம் வந்து விடு.
நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் - இங்கு
துப்பாக்கி முனையில் மட்டுமே
மலர்கள் மலரும்
மரிப்பதர்காக மட்டும்.!!!...
Tuesday, December 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment